மூன்று நாடுகளுக்கு கூறு போட்டு விற்கப்படும் இலங்கை - அம்பலத்திற்கு வந்த தகவல்

arrest colombo protest sri Lanka battialo
By Kalaimathy Jul 12, 2021 08:27 AM GMT
Report

இந்தியா, அமெரிக்கா, சீனா, ஆகிய நாடுகளுக்கு இலங்கை தேவை அந்த நாடுகளுக்கு நாட்டை தேசிய கட்சிகள் கூறுபோட்டு விற்று அதனூடாக கிடைக்கப் பெறுகின்ற தரகு பணத்தில்  நடத்துகின்ற அரசியல் தான் காணப்படுகின்றது.

எனவே இந்த நாட்டை காப்பாற்ற மக்கள் ஒரு போராட்ட மத்திய நிலையத்தை உருவாக்கி அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என முன்னனி சோசலிச கட்சியின் உறுப்பினரும் சமஉரிமை இயக்கத்தின் ஒருங்கமைப்பாளருமான தர்மலிங்கம் கிருபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொய்ஸ் ஒவ் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஜோன் கொத்தலாவ சட்டமூலத்தை கிழித்தெறியும் சட்டத்துக்கு அமைவாக நாங்கள் முன்னெடுத்த போராட்டத்தை நசுக்கும் முகமாக எங்களுடன் கலந்துகொண்ட தொழிற்சங்கங்கள், மாணவர்கள், தாய்மார்கள்,  பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் கைது செய்து பெண்களின் ஆடைகளை கிழித்து வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏற்றிச் சென்றனர்.

அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற போது நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்து பொலிஸாரை எச்சரித்ததற்காக அரசாங்கம், தன்னிச்சையாக அவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளது. 

இந்த சட்டமூலத்துக்கு எதிராக நாங்கள் கிழர்ந்தொழும் போது அதனை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்து  நடைமுறைப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் தன்னால் முடிந்ததை செய்ததுடன் இந்த சட்ட மூலம் ரணில் மைத்திரி இருந்த காலத்தில் கொண்டு வரப்பட்டது.

இதற்கு முதலும் மக்களுக்கு எதிராக அவர்களின் உணர்வுகளை பறிக்கின்ற பல சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்ட போதும் நாங்கள் எதிர்த்து நின்றோம். உதாரணமாக தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்க சைற்றம், சோபா என்கின்ற அமைப்புக்கள் மூலம் தொழிலாளர்களையும் மாணவர்களையும் நசுக்கின்ற சட்டமூலத்துக்கு எதிராக நாங்கள் பலமுறை போராடியிருக்கின்றோம்.

இதற்கு சகல தரப்பில் இருந்தும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றனர். அதற்கு சம உரிமை இயக்கம் தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்கிருக்கின்றது.   ஆனால்  சுகாதார சட்டத்துக்கு அமைவாக  இந்த போராட்டத்தை நடத்திய எங்கள் அனைவரையும் கைது செய்து வலுக்கட்டாயமாக ஏற்றி பெண்களின் ஆடைகளை கிழித்து அலோங்கலப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் தடுத்து வைத்துள்ளனர்.

அதேவேளை இஞ்சினியர் கூட்டுத்தாபனத்தில் இருந்த 9 பேரை வலுக்கட்டாயமாக வேலையில் இருந்து நிறுத்துவதும் அவர்களுக்கு எதிராக போராட்டம் செய்த துமிந்த நாகலவை கைது செய்து  சென்றுள்ளனர்.  இந்த அரசாங்கம் தங்கள் பிற்போக்கான நிலமையை வெளிக் கொண்டுவராமல் தாங்கள் நல்ல சிறந்த அரசியல் நடத்துகின்றது போல் மக்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த 15 வருடமாக நடந்த ஆட்சிமுறைக்கும் புதிதாக கொண்டு வந்த நிதி அமைச்சர் தான் பின்நின்று உழைத்தவர் அவரால் தோற்றுப்போன பின் அவரை அமெரிக்காவிற்கு அனுப்பி திரும்ப கொண்டுவந்து நிதி அமைச்சராக வைத்துக்கொண்டு புதுவிதமான அரசியல் செய்கின்றனர்.

இலங்கை நாடு சீனாவுக்கும் தேவை இந்தியாவுக்கும் தேவை அமெரிக்காவிற்கும் தேவை இது எங்கள் மக்கள் தொடர்பான நலன்கள் சார்ந்தது அல்ல அவர்களது நாட்டு நலங்கள் சார்ந்ததற்கு. எனவே இலங்கை மக்களை பாவிப்பதற்கு ஒரு கூட்டம் தேவை அந்த கூட்டம் தான் நாட்டில் தற்போது இருக்கின்ற ஆட்சியாளரும் சரி இதற்கு முதல் ஆட்சியாளராக இருந்தவரும் சரி இலங்கையை கூறுபோட்டு விற்கின்ற ஆட்களாகதான் இருந்திருக்கின்றனர்.

இது பிழை என நாங்கள் பல போராட்டங்களை நடத்தினோம் மக்களால் அழுத்தம் கொடுக்கும் போது தாங்கள் விடுகின்றது பிழையெனத் தெரிந்து அதனை திருத்துவதற்கு யோசிக்கவேண்டுமே தவிர அடக்குவதற்கு யோசிக்க கூடாது. இன்று என்ன நடக்கின்றது என்றால் அடக்குவதற்கான ஒரு சட்ட நடவடிக்கையை கொண்டுவருகின்றனர்.

ஜோன் கொத்தலவை என்கின்ற சட்டமூலத்தை கொண்டுவந்து அதன் மூலம் எல்லா விதமான கல்வி நிறுவனங்களையும் உள்வாங்கி அந்த நிறுவனம் ஊடாக சொல்கின்றதை மட்டும் செய்கின்ற ஒரு மாணவர் சமூதாயத்தை வருங்கால சந்ததியை உருவாக்குகின்ற நோக்கம் தான் இந்த அரசாங்கத்தின் நோக்கம்.  இந்த அரசின் நோக்கம் இன்று பல்கலைக்கழகத்துக்குள் உட்புகுந்தது நாளை பாடசாலை மாணவர்களிடம் இதே திணிப்பை கொண்டு வந்துவிடும்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் சங்க செயலாளர் ஸ்ராலின் ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்களினால் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு மனிதன். பின்தங்கிய ஏழை விவசாயிகள் மீனவர்கள் வறுமையிலுள்ள மக்களின் பிள்ளைகள் படிப்பதற்கு எதுவும் செய்து கொடுக்காமல் வெறுமனமே நடுத்தர வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் ஆனா கல்வி ஒழுங்கை செய்து கொடுப்பது பிழை என்று 3 தடவைக்கு மேல் அவர் தெரிவித்தார்.

இதனை எல்லா தொழிற்சங்கங்களும் ஏற்றுக் கொண்டு அரசுக்கு இதனை மாற்றி அமைக்கின்ற வழிமுறையை தேடுங்கள் என தெரிவித்தது ஆனால் எதுவுமே அரசாங்கம் செய்யாமல் இப்போது திடீரென பாடசாலைகளை திறக்கவேண்டும் இப்போது இயல்பு நிலைக்கு திரும்புகின்றோம் என காட்டுவதற்கான வேலையை செய்து கொண்டிருக்கின்றது.

எனவே கைது செய்யப்பட்டிருக்கும் அனைவரையும் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்யவேண்டும். எனவே அதனை மாற்றுவதற்கு மக்கள் அரசில்வாதிகள், ஊடகங்கள் சிந்திக்கவேண்டும் இதற்கான முழுமையான ஒத்துழைப்பை கொடுக்கும் போது மட்டும் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியுமே தவிர வெறுமனமே கட்சி அரசியலை மட்டும் கதைத்துக்கொண்டு இனவாதம். மதவாதம் மொழிவாதம கதைத்துக்கொண்டு இந்த பிரச்சனையை தீர்க்கமுடியாது. 

எனவே இதனை எதிர்த்து போராடுகின்ற இடதுசாரி தலைமையுள்ள மக்கள் நலன்சார்ந்த கருத்துக்கள் முன்வைக்கப்படும் அமைப்புக்கள் இதன் ஊடாக வெளியில் வந்து ஒரு போராட்ட மத்திய நிலையத்தை உருவாக்கி அரசுக்கு கொடுக்கப்படுகின்ற அழுத்தத்தின் ஊடாக மட்டுமே இதனை நிவர்த்தி செய்யமுடியும் எனவும் தெரிவித்து்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி