இளம் குடும்பஸ்தர் மீது ஸ்ரீலங்கா படையினர் துப்பாக்கி பிரயோகம்!
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் மண் ஏற்றி வந்தவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இன்று காலை 6.30 மணியளவில் உழவு இயந்திரத்தில் மண் ஏற்றி வரும் போது இராணுவத்தினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.
26 வயது மதிக்க தக்க ஒரு பிள்ளையின் தகப்பனான முருகையா சசிகுமார் என்பவரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரமும் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிக்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.