அடாவடியில் பிள்ளையான் கும்பல்! அபரிக்கப்பட்ட அப்பாவி மக்களின் காணிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான காணி மாஃபியாக்களின் அட்டகாசங்கள் ஆங்காங்கே பதிவாகி வருகின்றன.
இந்தச் சூழலில் மட்டக்களப்பு மயிலம்பாவடி பகுதியில் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின்(பிள்ளையான்) ஆதரவாளர்களால் அடாத்தாக பிடித்து அடைத்து வைக்கப்பட்டிருந்த காணிகளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி அல்லாத மக்கள் நேற்றைய தினம் சென்று 10 பேஜ்களாக பிரித்து எடுக்க முயற்சி செய்தனர்.
இந்த நிலையில் அடாத்தாக காணிகளைப் பிடித்து வைத்திருந்தவர்கள் கொக்குவில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து காவல்துறையினர் ஸ்தலத்திற்கு வந்ததால், மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.
இதன்போது, மக்கள் குறித்த காணிகளை துப்புரவு செய்வதற்கு வைத்திருந்த கத்தி, கோடாரி, மண்வெட்டி போன்றவற்றை காவல்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதுடன், இந்த முயற்சிகளில் ஈடுபட்ட மக்களை காவல் நிலையம் வருமாறும் தெரிவித்துச் சென்றுள்ளனர்
இது தொடர்பில் மக்கள் இவ்வாறு ஆதங்கம் வெளியிட்டிருந்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மக்களது பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இது தொடர்பில் ஆராய்வதாக கூறியுள்ளார்.