மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள விவசாயி...! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
மட்டக்களப்பில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட விவசாயி, உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று (21-04-2026) மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் சட்ட வைத்திய அதிகாரி இதனைக் கண்டறிந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடி ஸ்ரீ முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த காசிநாதன் ஜெயகாந்த் என்ற விவசாயியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
உள்ளூர் தயாரிப்பு
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19-04-2026) காலை தனது மிளகாய் செய்கைத் தோட்டத்தில் குறித்த விவசாயி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அவரது சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்று (21) பிரேத பரிசோதனை மேற்கொண்ட போது, உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் மூன்று முறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்குக் தடையப் பொருட்கள் எதனையும் விட்டுச் செல்லாது தப்பி ஓடிய மர்ம நபரைத் தேடிக் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |