கனடாவில் உச்சம் தொட்டுள்ள உணவுப் பொருட்களின் விலை!
மத்திய கிழக்கில் நிலவும் ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை மூடல் ஆகியவற்றின் நேரடித் தாக்கம் கனடிய நுகர்வோரைக் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
இது குறித்து கனடா புள்ளியியல் அலுவலகம் (Statistics Canada) புதிய தரவை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், அந்நாட்டின் பணவீக்க விகிதம் மார்ச் மாதத்தில் 2.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
காய்கறிகளின் விலை
குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காய்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ளது கனடிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெப்ரவரி மாதத்தில் 4.1 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களின் விலை உயர்வு, மார்ச் மாதத்தில் 4.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
காய்கறிகளின் விலையைப் பொறுத்தவரை மார்ச் மாதத்தில் மட்டும் 7.8 சதவீத உயர்வு பதிவாகியுள்ளது.
பெரிய பாய்ச்சல்
பெப்ரவரி மாதத்தில் வெறும் 0.5 சதவீதமாக இருந்த இந்த உயர்வு, ஒரே மாதத்தில் இவ்வளவு பெரிய பாய்ச்சலைக் கண்டுள்ளது.

குறிப்பாகச் சந்தைகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் வெள்ளரிக்காய், குடை மிளகாய் மற்றும் செலரி போன்றவற்றின் விலைகள் எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளன.
வழக்கமாகக் கனடாவில் காய்கறிகள் விளையும் பருவத்தில் விலைகள் குறையும் என்பது பொதுவான விதி எனவும் ஆனால் தற்போதைய போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக இம்முறை அந்த விதி தலைகீழாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |