காணி அபகரிப்பு, கலாசார அழிப்பு மூலம் தமிழ் மக்கள் மீது இனவழிப்பை மேற்கொள்ளும் அரசாங்கம்!

srilanka batticaloa gnanamutthu srinesan press meet
By Vasanth Jan 23, 2021 02:22 PM GMT
Report

காலத்தினை இழுத்தடிப்பதற்காகவும் சாட்சியங்களை மறைப்பதற்காகவும் கால நீடிப்பினை கோருவதற்காக ஒரு போலித்தனமான முறையில் யுத்த குற்றங்களை, மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு என்று ஒரு குழுவினை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

இது தமிழ் மக்களையும் சர்வதேசத்தினையும் ஏமாற்றுகின்ற ஒரு கண்துடைப்பு, காலத்தினை நீடித்து மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் சிங்கள பௌத்த மயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் துரிதமான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இன்றைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்வியை ஏற்படுத்தியுள்ளதுடன் பல்வேறு ஆதங்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

1958ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையில் தமிழ் மக்கள் திட்டமிட்டு இன அழிப்பு செய்யப்பட்டனர்.

அடுத்ததாக அவர்கள் பாரம்பரியமாக வாழுகின்ற காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அடுத்த கட்டமாக கலாசார அழிப்பு நடைபெற்று வந்தது.

அந்த வகையில் தான் 1958ல் ஆரம்பித்த தமிழ் மக்கள் மீதான அழிப்பு என்ற விடயம் 2009ஆம் ஆண்டில் ஒருவகையில் அவர்கள் முடித்திருக்கின்றார்கள்.

அடுத்த கட்டங்களான காணி அபகரிப்பு, கலாசார அழிப்பு போன்ற விடயங்கள் இன்றும் நடைபெற்று வருகின்றன.

இதற்கு சிறந்த உதாரணமாக தெற்காசியாவிலே சிறந்த நூலகம் என்று சொல்லப்படுகின்ற யாழ் நூலகம் திட்டமிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றிருந்தது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை திட்டமிட்டு அழித்திருந்தார்கள். அடுத்த கட்டமாக குருத்தூர் மலையில் அமைந்திருக்கின்ற ஆதி ஐயனார் ஆலயத்திற்குரிய சூலம் பிடுங்கப்பட்டு அந்த இடத்தில் புத்தபெருமான் எழுந்தருளச் செய்யப்பட்டிருக்கின்றார்.

ஒரு இனத்தை இல்லாமல் ஆக்குவதென்றால் இனத்தை அழிப்பது, இரண்டாவதாக அவர்களுடைய காணிகளை திட்டமிட்டு அபகரிப்பது, மூன்றாவதாக அவர்களுடைய கலாசாரச் சின்னங்களை அழித்தொழிப்பது.

இந்த அரசாங்கம் போகின்ற பாதையைப் பார்க்கின்ற போது பேரினமயமாக்கல், பௌத்தமயமாக்கலுக்குரிய வேலைத்திட்டத்தின் கீழ் துரிதமாக பயணித்துக் கொண்டிருக்கின்றது.

உலக நாடுகளெல்லாம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டும்,கொரோனாவை தடுக்க வேண்டுமென்று ஏங்கிக்கொண்டிருக்கின்ற அதேவேளை இந்த நாடு கலாசார அழிப்பு விடயங்களிலும் காணி அபகரிப்பு விடயங்களிலும் ஈடுபட்டிருக்கின்றது.

இதற்கு உதாரணமாக மயிலத்தமடு, மாதவனை பிரச்சினையை சொல்லலாம். 2015க்கு முற்பட்ட காலத்தில் வேறு மாவட்டங்களில் இருந்து வந்து குடியேறியவர்கள் பயிர்ச்செய்கை என்ற போர்வையில் எமது பண்ணையாளர்களுக்கு தொல்லைகொடுக்கும் பணியை மேற்கொண்டனர்.

2015க்கும் 2019க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

புதிய அரசாங்கம் வந்ததும் சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் மீண்டும் வந்துள்ளனர்.

பழையபடி இனமுறுகல், இனமோதல்களை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கிழக்கு மாகாண ஆளுநர் பெரும்பான்மையின மக்களை இங்கு கொண்டு வந்து குடியேற்றுவதில் அக்கறையாக இருந்து வருகின்றார்.

கிழக்கு மாகாணத்தில் இனமுறுகல், இனமோதல்களை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அப்பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தமது பயிர்களை கால்நடைகள் அழித்துவிட்டதாக கூறி 17வழக்குகளை கரடியனாறு பொலிஸ் மூலமாக ஏறாவூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

வேறு மாவட்டங்களில் இருந்துவந்து சட்ட விரோதமாக காணிகளைப்பிடித்து சட்ட விரோதமாக காடுகளை அழித்து, சட்ட விரோதமாக பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு, கால்நடைகளை சட்ட விரோதமாக கொலைசெய்கின்றனர், பண்ணையாளர்கள் தாக்கப்படுகின்றனர்.

மறுபக்கத்தில் சட்ட விரோதமாக செய்யப்பட்ட பயிர்களை கால்நடைகள் அழித்துவிட்டது எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோன்று 06 பண்ணையாளர்கள் கட்டிவைத்து தாக்கப்பட்ட சம்பவமானது கரடியனாறு பொலிஸ் பிரிவில் நடைபெற்ற நிலையில் மஹோயாவில் நடந்த சம்பவமாக சோடித்து மஹோயா நீதிமன்றத்தில் மஹோயா பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வாறு பண்ணையாளர்களினை வேறு மாவட்டங்களில் இருப்பது போன்று காட்டுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இனஅழிப்பு மூலமாக, கலாசார அழிப்பு மூலமாக, காணி அபகரிப்பு மூலமாக தமிழ் பேசுகின்ற மக்கள் ஒடுக்கப்படுகின்ற, அடக்கப்படுகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த விடயங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கோட்டாபய ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் கடந்துவிட்டது.

இதுவரைக்கும் ஜனாதிபதி யுத்ததின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், இனஅழிப்பு தொடர்பான விடயங்கள், யுத்தக்குற்றச்சாட்டுகள் எந்தவிதமான கருத்துகளும் வெளியிடவில்லை.

காணாமல்போனவர்களை மறந்துவிடுங்கள், காணாமல்போனவர்களை மண்ணைத்தோண்டி தேடிப்பாருங்கள் என்று விமல் வீரவன்ச போன்றவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

தற்போது ஐ.நா.மனித உரிமைப்பேரவையில் இது தொடர்பான விடயங்கள் பேசப்படவுள்ள நிலையில் இலங்கையிடம் பல கேள்விகள் முன்வைக்கப்படவுள்ளன. ஏற்கனவே 34:1, 30:1, 40:1 பிரேரரணைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வந்துள்ளது.

தற்போது மனித உரிமை பேரவையில் இவை கேள்விக்குள்ளாகப்போகின்றது என்ற காரணத்தினால் காலத்தினை இழுத்தடிப்பதற்காகவும் சாட்சியங்களை மறைப்பதற்காகவும் கால நீடிப்பினை கோருவதற்காக ஒரு போலித்தனமான முறையில் யுத்த குற்றங்களை, மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு என்று ஒரு குழுவினை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இது தமிழ் மக்களையும் சர்வதேசத்தினையும் ஏமாற்றுகின்ற ஒரு கண்துடைப்பு, காலத்தினை நீடித்து மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடாகும்.

இதனை மக்கள் ஒரு துளியும் நம்பமாட்டார்கள். அரசாங்கத்தின் பக்கம் நின்று தலையாட்டிக்கொண்டிருப்பவர்கள் அனைத்துக்கும் தலையாட்டுவார்கள்.

அதனைவிட ஜெனிவாவுக்கும் சென்று இங்கு ஒரு பிரச்சினையும் இல்லையென்று சொல்வதற்கு கூட சாட்சியமாக இருப்பார்கள் இதுவே உண்மை நிலையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
30ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கிளிநொச்சி

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

16 Sep, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஜேர்மனி, Germany

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு

17 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Markham, Canada

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025