அமெரிக்கர்களுக்கு முன்னணி நிறுவனங்கள் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
எச்1பி விசா வைத்திருப்போர் 14 நாட்களுக்கு அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என முன்னணி நிறுவனங்கள் வலியுருத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க (America) ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
இந்தநிலையில், அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் எச்1-பி விசா விண்ணப்பிக்கும் முறையில் கட்டுப்பாடுகளை சில நாட்களுக்கு முன்பு அவர் விதித்தார்.
அதிக திறமை
அதிக திறமை உள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் எச்1-பி விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை ஒரு லட்சம் அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) உயர்த்தி ட்ரம்ப் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.
கட்டண உயர்வு
இதனடிப்படையில், உயர் திறமையான வெளிநாட்டு பணியாளர்களுக்கான திட்டத்தில் எச்-1பி விசா விண்ணப்ப கட்டணத்தை ஒரு லட்சம் டொலர்களாக உயர்த்தும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தநிலையில், எச்1-பி விசா கட்டண உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகின்றது.
இந்த பின்னணியில் எச்1பி விசா வைத்திருப்போர் அனைவரும் குறைந்தது 14 நாட்களுக்கு அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், வெளிநாடுகளில் வசிக்கும் ஊழியர்கள் 24 மணி நேரத்துக்குள் அமெரிக்கா திரும்ப வேண்டும் என்றும் மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முக்கிய நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
