மட்டக்களப்பில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் ஊழியர்
மட்டக்களப்பில் (Batticaloa) வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கலாறு பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து நேற்று (20) சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயான 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காப்புறுதி நிறுவனம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண் காப்புறுதி நிறுவனமொன்றில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த பெண்ணின் மகன் தனது தாயாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது பல முறை அழைத்தும் அவரிடமிருந்து பதில் எதுவும் கிடைக்காததால் தாயை தேடி வீட்டிற்கு வந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இந்தநிலையில், வீட்டிற்கு வந்து பார்த்த போது தாயார் உயிரிழந்து இருப்பதை அவதானித்த அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




