பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே எழுந்தருளிய மாமாங்கேஸ்வரர்!

Batticaloa Sri Lanka Festival
By Bavan Aug 11, 2026 06:29 AM GMT
Report

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்பத் தேர் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இன்று (11) காலை ஆலயத்தில் இடம்பெற்ற விசேட கிரியை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜையின் பின்னர் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் 'அரோகரா' கோஷத்திற்கு மத்தியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி மாமாங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும் ஒருங்கே கொண்ட இவ்வாலயத்தின் மகோற்சவமானது கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மீண்டும் வழமைக்கு திரும்பிய கடவுச்சீட்டு விநியோகம்!

மீண்டும் வழமைக்கு திரும்பிய கடவுச்சீட்டு விநியோகம்!

கோலாகலமாக நடைபெற்ற தேர் உற்சவம்

இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு, பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே எழுந்தருளிய மாமாங்கேஸ்வரர்! | Batticaloa Sri Mamangeswarar Temple Car Festival

அதனைத் தொடர்ந்து வெளிவீதியில் பஞ்சமுக விநாயகர் தேரில் ஆரோகணிக்க, அங்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பெண் மற்றும் ஆண் பக்தர்கள் வடமிழுக்கத் தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

ஸ்ரீ ராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினையும், பிதிர்க்கடன் தீர்க்கும் புனிதத் தீர்த்தக் கேணியைக் கொண்ட தலமென்ற புகழினையும் உடையதாக இம்மாமாங்கேஸ்வரர் ஆலயம் விளங்கி வருகின்றது.

இவ்வாலயத்தின் தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசை தினமான நாளை (12) நண்பகல் வரலாற்றுச் சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை : அநுர அரசு அதிரடி தீர்மானம்

இலங்கையில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை : அநுர அரசு அதிரடி தீர்மானம்

இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள பயங்கர நபர்கள் : காவல்துறை மாஅதிபரின் நேரடி கண்காணிப்பில் விசாரணை

இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள பயங்கர நபர்கள் : காவல்துறை மாஅதிபரின் நேரடி கண்காணிப்பில் விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024