தேசிய ரீதியான உதைப்பந்தாட்ட சமர் : இறுதிப்போட்டிக்கு தெரிவான மட்டக்களப்பு மாவட்ட அணி
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும் 2023 ம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் விளையாட்டு போட்டிகள் பதுளையில் இம்முறை நடைபெற்றுவருகின்றது.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி உதைப்பந்தாட்ட போட்டியில் கலந்துகொண்டுள்ள மண்முனை மேற்கு இளைஞர் கழக வீரர்கள் நாட்டின் பலம்வாய்ந்த பல முன்னணி விளையாட்டு கழகங்களை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
இறுதிப்போட்டிக்கு தெரிவு
எமது மட்டக்களப்பு மாவட்ட அணி முதல் சுற்றில் கேகாலை மாவட்ட அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

காலிறுதிப் போட்டியில் கம்பஹா மாவட்ட அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த காலி மாவட்ட அணியை எதிர்த்தாடி 4:1 எனும் கோள்கள் அடிப்படையில் பாரிய வெற்றிவாகையினை சூடி இறுதிப்போட்டிக்கு தெரிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் எமது மட்டக்களப்பு மண்ணின் மைந்தர்கள் இறுதிப்போட்டியிலும் வெற்றிவாகை சூட வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.