தீயுடன் சங்கமமான ஊடக ஆளுமை ஆனந்தி சூரியப்பிரகாசம்
இலண்டனில் (London) அண்மையில் காலமான ஊடக ஆளுமையும் அனைத்துலக செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவருமான திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம் (Ananthi Sooriyapragasam) அவர்களுக்கு நேற்று (16) மாலை இறுதி விடை வழங்கப்பட்டு அவரது பூதவுடல் தகனம் செயப்பட்டது.
பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப்படும் பிபிசியின் (BBC) தமிழ் ஒலிபரப்பான தமிழோசையில் 2005 ஆம் ஆண்டுவரை 30 ஆண்டு காலமாக பணிபுரிந்த ஆனந்தி அவர்கள் கடந்த மாதம் சுகயீனம் காரணமாக காலமாகியிருந்தார்.
ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சினை மற்றும் தமிழர் சமூகத்தின் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்களில் ஆர்வத்துடன் செயற்பட்ட ஆனந்தி அக்கா எனப் பரவலாக அறியப்பட்டிருந்த அன்னாரின் மறைவை அடுத்து அவர்களை மாண்பேற்றும் வகையில் நினைவு நிகழ்வுகளும் நடத்தப்பட்டிருந்தன.
இறுதி நிகழ்வுகள்
இந்த நிலையில் நேற்று அவரது இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிகழ்வில் ஊடக அமைப்புகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றம் அன்னாரின் உறவினர்களும் பங்கெடுத்திருந்தனர்.
இறுதி நிகழ்வில் அன்னாரின் சேவை குறித்த இரங்கல் உரைகளும் வழங்கப்பட்டிருந்தன
அன்னாரை மாண்பேற்றும் வகையில் அனைத்துலக செய்தியாளர் ஒன்றியம் நாடுகடந்த அரசாங்கம், தமிழர் ஒருங்கிணைப்பு குழு, வரலாற்றுமையம் ஆகிய அமைப்புகள் உட்பட்ட அமைப்புகளால் மலர்வளையங்களும் வைக்கப்பட்டிருந்தன.
இதேவேளை ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்களுக்கு ஐபிசி தமிழ் சிலவருடங்களுக்கு முன்னர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய மதிப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்