மது போதையால் தனது நண்பனையே அடித்து கொன்ற நபர்!
களுத்துறை தோமா மஹகம பிரதேசத்தில் இருவருக்கிடையில் மது போதையால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருவரும் நண்பர்கள் என்பதுடன், அவர்கள் ஒன்றாக வீட்டில் மது அருந்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு சந்தேக நபரால் தடி ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளார்.
பின்னர் தாக்கிய நபரே பக்கத்து வீட்டுக்காரரிடம் தாக்கத்திற்கு உள்ளானவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார்.
மேலதிக விசாரணை

இந்நிலையில் பலத்த காயமடைந்த நபர் பிம்புர பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மஹகம, தோமா மஹகம பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் நடத்திய சந்தேக நபர் தனது 12 வயது மகனுடன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அகலவத்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 19 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்