மேல் மாகாணத்தில் ஆபத்தான நிலை! வீட்டிலேயே உயிரிழக்கும் கொரோனா நோயாளிகள்
corona
sri lanka
people
By Shalini
மேல் மாகாணத்தில் வைத்தியசாலையில் இடம் இல்லாத காரணத்தினால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேல் மாகாண சுகாதாரத் துறை செயலாளர் காமினி தர்மசேன ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதை தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக அமைக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது ஆபத்தான சூழ்நிலை என்றும், மறைக்க எதுவும் இல்லை என்றும் கூறினார்.
"கொரோனா நோயாளிகள் வெளியேறினால் மட்டுமே மருத்துவமனைகளில் இடத்தை கண்டுபிடிக்கும் நிலை உள்ளது.”என்றும் அவர் கூறினார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்