பதவி விலகிய பெல்ஜியம் பிரதமர்: கண்ணீருடன் விடைபெற்றார்
Belgium
World
By Thulsi
பெல்ஜியம்( Belgium) நாட்டின் பிரதமராக இருந்த அலெக்சாண்டர் டி குரூ (Alexander De Croo) பதவி விலகல் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தேசிய மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி படுதோல்வி அடைந்ததையொட்டி அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
பிரதமர் பதவி விலகல்
தேர்தல் பிரசாரத்தில் நான் முக்கிய தலைவராக இருந்தேன். இது நான் எதிர்பாராத முடிவு. எனவே தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் என பெல்ஜியம் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எங்களுக்கு இது மிகவும் கடினமான மாலை. நாங்கள் தோற்றோம். நாளை முதல் நான் பிரதமர் பதவி விலகல் செய்வேன் என்று ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளர்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தனது பதவி விலகல் முடிவை அறிவிக்கும் போது கண்ணீர் விட்டு அழுதமை இங்கு குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்