காடு போன்ற முடி வளர்ச்சிக்கு சிறந்த எண்ணெய் : வீட்டிலேயே தயாரிக்கலாம்
Hair Growth
Beauty
By Shalini Balachandran
முடி வளர்ப்பது என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான்.
இருந்தாலும் பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல் மற்றும் வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.
இந்தநிலையில், நீளமான முடி வளர்ச்சிக்கு உதவும் எண்ணெயை வீட்டிலேயே செலவில்லாமல் எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரோஸ்மேரி எண்ணெய்- 15 சொட்டு
- தேங்காய் எண்ணெய்- ½ கப்
- தேன்-1 ஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
- முதலில் ஒரு கிண்ணத்தில் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் சேர்க்க நன்றாக கலக்கவும்.
- பின் இதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளவும்.
- இறுதியாக கலவையில் ரோஸ்மேரி எண்ணெயைச் சேர்க்கவும்.
- இந்த எண்ணெய் தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்துகொள்ளவும்.
- இதன் பின் 30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை மென்மையான ஷாம்பூவை கொண்டு கழுவ வேண்டும்.
- ரோஸ்மேரி எண்ணெய் முடி வளர்ச்சியைத் தூண்டும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் முடியை வலுப்படுத்தவும் உதவுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்
நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்