இயற்கையாக காடு போன்ற முடி வளர்ச்சி வேண்டுமா : நிரந்தரமான தீர்வு இதோ !
பெண்களுக்கு பொதுவாக முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
தற்போது மாறி வரும் உணவு மற்றும் வாழ்க்கை பழக்கம், தூசி உள்ளிட்ட பிரச்சனைகளால் முடி உதிர்வு, இளநரை, பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் இயற்கை எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
கடுகு, கறிவேப்பிலை எண்ணெய்
இந்த எண்ணெய் கலவை முடியை புத்துணர்ச்சியூட்ட உதவுகிறது. கடுகு எண்ணெய் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
மேலும் கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டின் மற்றும் புரதம் நிறைந்துள்ளது.
இது புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கடுகு, கறிவேப்பிலை எண்ணெய் கலவையானது செயலற்ற நுண்ணறைகளை எழுப்ப ஒரு இயற்கை தூண்டுதலாக செயல்படுகிறது.
தேவையானவை
கடுகு எண்ணெய் - கால் கப்
புதிய கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
கடுகு, கறிவேப்பிலை எண்ணெய் தயார் செய்யும் முறை முதலில் கால் கப் கடுகு எண்ணெயை குறைந்த தீயில் வேகவைக்க வேண்டும்.
பிறகு, ஒரு கைப்பிடி புதிய கறிவேப்பிலைகளைச் சேர்த்து, இலைகள் கரும் பச்சை நிறமாக மாறும் வரை கொதிக்க விட வேண்டும்.
இதை ஆறவைத்து, வடிகட்டி சேமித்து வைத்து, பின்னர் நேரடியாக தலையில் தடவலாம்.
