இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தளங்கள் இவை தான்..!
இந்தியாவானது இப்போது வல்லரசு பாதையை நோக்கி முன்னோக்கி செல்கின்ற வேளை, சுற்றுலாத்தளத்திலும் தனது வளர்சசியை பறைசாற்றி வருகிறது.
இந்தியா என்றாலே நெருக்கமான மக்கள் பரம்பல், துர்நாற்றம் வீசும் வீதிகள் என பலர் கூறுவார்கள் ஆனால் சுற்றுலா, உணவு, சினிமா என பலதரப்பட்ட விடயங்களில் இந்தியாவும் சிறந்து விளங்குகிறது.
அதுவும் குறிப்பாக உணவு முறை என்பது உலகளவில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இதனை இரசிப்பதற்காவே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் பல்வேறுபட்ட மாநிலங்களுக்கு செல்கின்றனர்.
எனினும் இந்தியாவில் பல்வேறுபட்ட கலாச்சாரங்களை உள்ளடக்கிய பிரசித்தி பெற்ற இடங்கள் உள்ளன. அங்கு உள்ள சுற்றுலா தளங்களில் அதிகமாக மக்கள் சென்ற இடங்களை MINISTRY OF TOURISM அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது.
தாஜ்மஹால்
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் (TAJMAHAL) உலகின் மிகவும் பிரலமான மற்றும் காதலின் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால் இந்தியாவின் சுற்றுலாதளங்களில் மிகவும் பிரலமாக உள்ளது.
இது டெல்லியிலிருந்து சுமார் 250 கி.மீ ஆக்ராவில் உள்ள நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.
வாரணாசி (கங்கை நதி)
இந்துக்களின் புனித தளங்களில் மிகவும் முக்கியமாக கருதபடுவது வாரணாசி ஆகும்.
இங்குதான் ஜீவநதியான கங்கை நதி பாய்கிறது இந்த வாரணாசி உலகின் பழமையான நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது.
இது இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது.
கோவா
இந்தியாவில் அதிகம் அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்ற இடமாக கோவா அமைந்துள்ளது.
இங்கு மிகவும் புகழ்பெற்ற கடற்கரைகள் மற்றும் பழங்கால கட்டிடகலைகள் சொகுசு விடுதிகள் போன்றவை உள்ளன.
அமிர்தரஸ்
அமிர்தரஸில் உள்ள தங்க கோவில் சீக்கியர்களின் புனித தளமாக கருதப்படுகிறது.
இங்கு அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் செல்வார்கள் .இதனால் நாளொன்றுக்கு 50,000 மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றன.
இது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது.
ஜெய்பூர்
ஜெய்பூரில் உள்ள அமர்க்கோட்டை மிகவும் பிரலமாக கருதப்படுகிறது.
இங்கு அமர்கோட்டை மற்றும் ஜெய்சங்கர் கோட்டை போன்றவை சுற்றுலா தளங்களாக அமைந்துள்ளது.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த கோட்டைகள் முற்றிலும் மலையை செதுக்கி செய்யப்பட்டது.
எல்லோரா குடைவறை
எல்லோரா குடைவறை இந்தியாவில் அவுரங்கபாத்தில் அமைந்துள்ளது.
இந்த புகழ்பெற்ற எல்லோரா குகைகள் 5-ஆம் நூற்றாண்டுகளில் புத்த மற்றும் இந்து துறவிகளால் கட்டப்பட்டது.
இங்கு மலையை மேலிரிந்து கீழாக குடைந்து அவற்றினுள் சிற்பங்களை செதுக்கியுள்ளனர்.இது மும்பையிலிருந்து 300 கி.மீ தொலைவில் உள்ளது.
இது UNESCO-வின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாகவும் உள்ளது.
அலப்பி
கேரளாவில் அமைந்துள்ள அலப்பி உலகின் மிகவும் அழகான பகுதியாகவும் அமைந்துள்ளது.
இது கேரளாவின் மலபார் கடற்கரையில் அமைந்துள்ளது.
இங்கு AYURVEDA MASSAGE மற்றும் BOAT HOUSE -மிகவும் பிரலமானது.
ஊட்டி
மலைகளின் அரசி என்று கூறப்படும் ஊட்டி நம் தமிழகத்தில் அமைந்துள்ளது.
இங்கு முதுமலை சரணாலயம் மற்றும் அவலாஞ்சி ஏரி, எமரால்டு ஏரி, ஊட்டி பொடானிக்கல் காடன் மற்றும் ரோஸ் காடன் போன்றவையும் உள்ளன.