இந்த கிராமத்தில் குடியேறினால் வீடு, காருடன் ரூ.15 லட்சம் இலவசம்! எங்க இருக்கு தெரியுமா...
வீடு, வேலை, வாகனம், வங்கிகணக்கில் பெருந்தொகையான பணம் என அனைத்தையும் இலவசமாக வழங்கி மகிழ்ச்சியாக மட்டுமல்லாமல் மக்களை ஆடம்பரமாகவும் வாழ வழிசெய்யும் கிராமம் ஒன்று உலகில் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜியாங்யின் கவுண்டியில் உள்ள ஹுவாக்ஸி ஹுவாக்ஸி என்ற கிராமமே சீனாவின் பணக்கார கிராமமாக கருதப்படுகிறது.
ஒரு சோசலிச கிராமத்திற்கு முன்னுதாரணமாக விளங்கும் இந்த கிராமமானது கடந்த 1961 ஆம் ஆண்டில் சீனாவிலுள்ள உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வு ரென்பாவ் என்பவரால் நிறுவப்பட்டது.
விவசாய சமூகம்
ஒரு ஏழை விவசாய சமூகத்தை ஒரு பெரும் பணக்கார சமூகமாக மாற்ற வேண்டும் என்ற அவரது தொலைநோக்கு சிந்தனையே இன்று இந்த முன்மாதிரிக் கிராமம் உருவாவதற்கு வழிசமைத்துள்ளது.
இந்த கிராமத்தில் 2009 ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு குடும்பமும் ஒரு வீடு மற்றும் குறைந்தபட்சம் ஒரு கார், 150,000 அமெரிக்க டொலர் மதிப்பில் பணம் என இந்தக் கிராம சமூகத்தால் வழங்கப்பட்ட சொத்துக்களை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
தவிரவும், இந்தக் கிராமம் முழுவதும் தேவையான பழங்களை தரும் மரங்களால் சூழப்பட்டுள்ளன. அதன் இடையே ஒரே மாதிரியான சிவப்பு-கூரையை உடைய வீடுகள், அழகுபடுத்தப்பட்ட புல்வெளிகள் மற்றும் இரண்டு கார் திருத்துமிடம் போன்றவற்றுடன் அனைவர் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் நேர்த்தியாக இந்தக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கிராமத்தில், விவசாயம், வணிகம், தொழில்துறை என அனைத்தும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன, முக்கியமாக இந்த கிராமத்திலுள்ள தொழிற்சாலைகள், சீன நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு லாபம் ஈட்டி தருவதாகவும் அமைவதாக கூறப்படுகிறது.
நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்
இந்தக் கிராமம் சுற்றியுள்ள பகுதிகளுடன் ஒப்பிடும்போது அதன் ஆடம்பரத்திற்காக மட்டுமல்லாமல் அதன் சீரான தன்மைக்காகவும், செழிப்பிற்காகவும் புகழ் பெற்றுள்ளது.
இந்த கிராமத்தில் 400 குடும்பங்கள் வாழ்ந்துவரும் நிலையில் இந்த கிராமத்திற்கு புதிதாக குடியேறும் மக்களுக்கு ஐரோப்பிய பாணியில் வீடும், கார், வேலை என அனைத்தையுமே இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது, தவிரவும் மேலைத்தேய நாடுகளில் இருப்பது போல தரமான கல்வி, மருத்துவ வசதி, சுகாதார வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளும் இங்கே இலவசமா செய்து கொடுக்கப்படுகிறது.'
ஆனால் இந்த வசதிகள் சலுகைகள் அனைத்துமே இந்தக் கிராமத்தில் இருக்கும் வரை மாத்திரமே அனுபவிக்க முடியும், இந்த கிராமத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில் எல்லாவற்றையும் இந்த கிராம நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டு தான் போக வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் இந்த கிராமம் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |