கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற பெரும் மோசடி : சிக்கிய ஊழியர்
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பயணப் பொதிகளில் இருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தில் உள்ள பொதிகள் சேமிப்பு வளாகத்தில் பணியமர்த்தப்பட்ட சந்தேக நபர், விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொருட்களை வைக்கும் வளாகத்திற்குள்
கடந்த 23-ம் திகதி மலேசியாவில்(malaysia) இருந்து வந்த பயணிகளின் பொருட்களை வைக்கும் வளாகத்திற்குள் மர்மநபர் ரகசியமாக நுழைந்து பொருட்களை திருடிய காட்சிகள் அந்த இடத்தில் உள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்( sril lankan airlines) புலனாய்வுப் பிரிவின் ஊழியர்கள் காணொளியை கண்காணித்து, இது தொடர்பாக விமான நிலைய காவல்துறையில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
பொருட்கள் காணாமல் போனதாக முறைப்பாடுகள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் பயணிகளிடம் இருந்து பொருட்கள் காணாமல் போனதாக பலமுறை முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து அவர்கள் அவதானமாக செயற்பட்டதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்