கொழும்பிலிருந்து சைக்கிளில் றீ(ச்)ஷாவை வந்தடைந்த குழு
பிரித்தானியாவிலுள்ள (UK) தொண்டு நிறுவனம் ஒன்று யாழிலுள்ள வைத்தியசாலைக்காக நிதி சேகரிப்பதற்கு கொழும்பில் (Colombo) இருந்து யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) சைக்கிளில் வந்தடைந்துள்ளனர்.
இந்த சைக்கிளோட்ட பயணத்தில் 60 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 12ம் திகதி ஆரம்பமான குறித்த பயணம் இன்று காலை கிளிநொச்சி - இயக்கச்சியிலுள்ள றீ(ச்)ஷாவை (Reecha) வந்தடைந்துள்ளது.
றீ(ச்)ஷாவை வந்தடைந்த இவர்கள் நாளை காலை இங்கிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் - புத்தூரை சென்றடையவுள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான 450 Km தூரத்தை 4 நாட்கள் சைக்கிளில் பயணித்து நாளை (15) நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் புத்தூரில் அமைந்துள்ள பரிலுக்கா மெதடிஸ்த வைத்தியசாலைக்கு நிதி சேகரிப்பதற்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சைக்கிளோடி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)