ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது நிறுத்தப்படாவிட்டால் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்து செங்கடலில் செல்லும் கப்பல்களை இலக்குவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.இதனால் செங்கடல் ஊடான கப்பல் போக்குவரத்து பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையிலேயே அமெரிக்க அதிபர் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
யேமன் மீதான தாக்குதல் ஏன்
இதேவேளை செங்கடலில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களைத் தடுத்து, அதனைக் குறைக்கும் நோக்கில் யேமன் மீது தாக்குதல் மேற்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் லிண்டா தோமஸ் - கிரீன்பீல்ட் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ளார்.
இன்றும் தாக்குதல்கள்
இதனிடையே செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர் கப்பலான USS Carney இன்று (13) காலை யேமனின் ராடர் கட்டமைப்பை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட கூட்டு இராணுவத்தினர் தற்போது ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து 30-க்கும் அதிக தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |