இஸ்ரேல் - ஹமாஸ் போர் : 100 நாட்களில் 10,000 குழந்தைகள் உயிரிழப்பு
காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து நடத்திய வான்வெளி தாக்குதலில் இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளதாக சேவ் தி சில்ரன் அமைப்பின் இயக்குனர் ஜேசன் லீ தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“காசாவில் வசித்து வரும் 11 லட்சம் குழந்தைகளில் 10,000க்கும் அதிகமான குழந்தைகள் பலியானதால், மொத்த குழந்தை மக்கள் தொகையில் 1% பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல்
கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இந்த கொலைகள் நடந்துள்ளன.

இந்த தாக்குதலில் இருந்து தப்பிய குழந்தைகள், உடலில் காயங்களுடன் போதிய மருத்துவ வசதியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தங்களது பெற்றோரை இழந்து பல்வேறு கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர்.
காசாவில் மட்டும் சுமார் 1,000 குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழந்துள்ளனர்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 8 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்