தமிழர் பகுதியில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம்
இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று கிண்ணியாவில் இடம் பெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (13) திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் பழைய வைத்தியசாலை சந்தியில் ஆரம்பித்து கிண்ணியா பாலம் வரை முன்னெடுக்கப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டத்தை கிண்ணியா சிவில் சமூகம் ஏற்பாடு செய்திருந்ததுடன் இதில் பள்ளிவாசல் சம்மேளனங்களின் உறுப்பினர்கள், சூறா சபை உறுப்பினர்கள் ,பலஸ்தீனத்துக்கு ஆதரவான பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பலஸ்தீனத்துக்கு ஆதரவு
இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலஸ்தீனத்துக்கு எதிரான யுத்தத்தை நிறுத்து, பாடசாலை வைத்தியசாலைகள் அழிப்பதை நிறுத்து, இனப்படுகொலையை நிறுத்து, குழந்தைகள் பிள்ளைகளை அழிப்பதை நிறுத்து முதலான கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென் ஆபிரிக்காவுக்கு நன்றி தெரிவித்தும் அமெரிக்க பிரித்தானியாவை கண்டித்தும் கோசங்களை எழுப்பினர்.
"இது ஒரு மதம் சார்பானதோ ,இனம் சார்பானதோ ,நிலம் சம்மந்தமான போராட்டமோ அல்ல இது மனித நேயம் சம்மந்தமான போராட்டமே. ஜனநாயக போராட்டத்துக்கும் நீதிக்கான போராட்டத்துக்கு ஆதரவளிப்பதோடு சமாதானத்தை கொண்டுவர வேண்டும்.
அதிபரிடம் கோரிக்கை
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் குழந்தைகளை கொல்கிறார்கள் வைத்தியசாலைகளை அழிக்கிறார்கள் சியோனிசம் ஒழிக்கப்பட வேண்டும் யுத்த நிறுத்தப்பட வேண்டும்.
பலஸ்தீன மக்களின் மீதான இன அழிப்பு நிறுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன் இலங்கையில் இருந்து சென்ற கப்பலும் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என அதிபரிடத்தில் கோரிக்கை விடுக்கின்றோம்" என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |