பலாலி காணி விடுவிப்பு என்ற பெயரில் பாரிய அரசியல் நாடகம்! கொந்தளித்த அர்ச்சுனா
பலாலி காணி விடுவிப்பு தொடர்பில் தொடர்ந்தும் அரசாங்கம் போலி வாக்குறுதிகளை வெளியிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தமிழர் பகுதி
''தமிழர் பகுதியில் உள்ள அரசியல்வாதிகளுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் மூலமே இதுவரை எமக்கான தீர்வுகள் சரியாக வழங்கவில்லை.

பலாலியில் இன்றும் காணிகள் இல்லாது மக்கள் வாழ்கின்றனர். நிதி ஒதுக்கப்படுவதாக கருத்துக்களை அரசாங்கம் முன்னெடுத்தாலும், இது வரை உரிய தீர்வென்பது கிடைக்கவில்லை.
தையிட்டி தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் குறித்த அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.
கிளிநொச்சி முழுதும் மதுபான அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டு நடத்தப்படுகிறது. இது தொடர்பில் வெளிப்படுத்த நளிந்த ஜயதிஸ்ஸ வெட்கப்படுகின்றார்.
சிங்கள இனத்தை நம்பி வாழ்வதற்கு நாங்கள் ஒருபோதும் தயாரில்லை. வடக்கில் மாம்பழங்களை உற்பத்தி செய்ய திட்டமிடும் ஒருவருக்கு எவ்வாறு வடக்கை அபிவிருத்தி செய்ய முடியும்?” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |