அரசாங்கமே மிகப்பெரிய அச்சுறுத்தல்! அச்சத்தில் சஜித் தரப்பு
எதிர்க்கட்சிகளுக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும், தற்போதைய அரசாங்கமே பிரதான அச்சுறுத்தல் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி இன்று (30) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மரண அச்சுறுத்தல்
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “எங்களுக்கும் அச்சுறுத்தல்கள் உள்ளன. அதாவது மிகப்பெரிய அச்சுறுத்தல் இந்த அரசாங்கம், இந்த அரசாங்கத்தில் உண்மையான கொலை கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு குழு உள்ளது.

நாம் அரசாங்கத்திற்கு எதிராகப் பேசும்போது, அவர்கள் பெரும்பாலும் முகப்புத்தகத்தில் எங்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.
அவர்களில் எந்த வகையான மக்கள் இருக்கிறார்கள் என்பது கூட எங்களுக்குத் தெரியாது. நாடாளுமன்றத்திலேயே அவ்வாறான நபர்கள் இருக்கும் போது, வெளியில் எவ்வாறானவர்கள் இருப்பார்கள்?”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |