மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் இளைஞன் பலி
Sri Lanka Police
Kalutara
Sri Lankan Peoples
By Dhilak
மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் களுத்துறையில் இருந்து ஹென்டியங்கலை நோக்கி பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஹென்டியங்கல பாலத்திற்கு அருகில் இருந்த சுவரில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதன்போது, பலத்த காயமடைந்த இளைஞன் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரவீன் விஸ்வஜித் என்ற 19 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்