பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி குறித்து வெளியான அறிவிப்பு
2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகும் திகதி குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறித்த வெட்டுப்புள்ளிகள் ஓகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அந்த ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 92,043 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வி நடவடிக்கைகள்
அரச பல்கலைக்கழகங்களில் மாணவர் அனுமதிக்காக 42,937 மாணவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக வசந்த லியனகே சுட்டிக்காட்டினார்.

தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் ஓகஸ்ட் மாதத்தின் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வாரங்களில் சேர்க்கப்படுவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தைப் பொறுத்து, செப்டெம்பர் மாதத்தின் ஆரம்ப வாரங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வசந்த லியனகே தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |