மட்டக்களப்பில் அடித்து நொறுக்கப்பட்ட வயோதிபரின் வீடு: தப்பியோடிய சந்தேகநபர்கள்!

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation Law and Order
By Bavan Jun 17, 2026 12:07 AM GMT
Report

மட்டக்களப்பில் வயோதிபர் ஒருவரின் வீடு அடித்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நொச்சிமுனை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த முதியவர் ஒருவர் ஆலயத்தில் சண்டை பிடிக்கக் கூடாது எனத் தெரிவித்து மோதலைத் தடுத்தபோது அவர் கீழே வீழ்ந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேசக் கப்பல்களுக்கு ஈரானின் புதிய சுங்கக் கட்டணக் கெடுபிடி!

சர்வதேசக் கப்பல்களுக்கு ஈரானின் புதிய சுங்கக் கட்டணக் கெடுபிடி!

கூரிய ஆயுதங்கள்

குறித்த முதியவரின் வீடு, நொச்சிமுனை இசை நடனக் கல்லூரி வீதியில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தினத்தன்று முதியவர் மற்றும் அவரது மனைவி வீட்டைப் பூட்டிவிட்டுச் சமுர்த்தி காரியாலயத்திற்குச் சென்றுள்ளனர்.

மட்டக்களப்பில் அடித்து நொறுக்கப்பட்ட வயோதிபரின் வீடு: தப்பியோடிய சந்தேகநபர்கள்! | Batticaloa Elderly Man House Attacked

இதன்போது கூரிய ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்ற இருவர், வீடு பூட்டியிருந்ததையடுத்து மதில் மேலால் குதித்து வீட்டின் கதவை உடைத்து, ஜன்னல் மற்றும் அலமாரிகளின் கண்ணாடிகளை உடைத்து வீட்டைச் சேதப்படுத்திவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து வீடு திரும்பியவர்கள், வீடு உடைத்துச் சேதப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு அறிவித்ததையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

றீச்ஷாவின் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி...! வழங்கி வைக்கப்பட்ட பரிசில்கள்

றீச்ஷாவின் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி...! வழங்கி வைக்கப்பட்ட பரிசில்கள்

பல முறைப்பாடுகள்

பின்னர் வீதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தியிருந்த சிசிடிவி (CCTV) கேமராக்களில் பதியப்பட்டிருந்த காட்சிகள் மூலம் குறித்த நபர்களை அடையாளம் கண்ட காவல்துறையினர், அவர்கள் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளைக் காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் அடித்து நொறுக்கப்பட்ட வயோதிபரின் வீடு: தப்பியோடிய சந்தேகநபர்கள்! | Batticaloa Elderly Man House Attacked

இதேவேளை இந்த நபர்கள் அந்தப் பகுதியில் கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் எனவும் இவர்கள் பல தடவைகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுப் பிணையில் வெளிவந்துள்ளவர்கள் எனவும் இவர்கள் தொடர்ந்து அந்தப் பகுதியில் வாள்களுடன் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் இது தொடர்பாகக் காவல்துறையினருக்குப் பல முறைப்பாடுகள் தெரிவித்தும் இவர்களுக்கு எதிராகக் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்தப் பகுதி மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய ஆபத்தில் இஸ்ரேல்.. ஈரானிலிருந்து தோல்வியுடன் திரும்பும் ட்ரம்ப்!

மிகப்பெரிய ஆபத்தில் இஸ்ரேல்.. ஈரானிலிருந்து தோல்வியுடன் திரும்பும் ட்ரம்ப்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்