அமெரிக்க தேர்தலில் தலையிடும் பிரித்தானியா - ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
புதிய இணைப்பு
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் கமலா ஹாரிஸின் (Kamala Harris) பிரச்சாரத்திற்கு பிரித்தானியாவிலுள்ள (UK) தொழிற்கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அங்கத்தவர்கள் முன்வந்துள்ளமையால் டொனால்ட் ட்ரம்பின் பிரச்சாரக் குழு பெடரல் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது.
பிரித்தானியாவின் தொழிற் கட்சி, அமெரிக்க தேர்தலில் தலையிடுவதாகவும் டொனால்ட் ட்ரம்பின் பிரச்சாரக் குழு குற்றம் சுமத்தியுள்ளது.
வெளிநாட்டு பிரஜைகளுக்கு பணம் செலுத்தி அமெரிக்காவில் (USA) தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வைக்க முடியாது என அந்நாட்டு சட்டங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹரிஸை (Kamala Harris) ஆதரித்து பில் கேட்ஸ் மில்லியன் கணக்கிலான டொலர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும், Microsoft நிறுவனருமான தொழிலதிபர் பில் கேட்ஸ் (Bill Gates), அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
சுகாதாரத்தை மேம்படுத்துதல், வறுமையைக் குறைத்தல் மற்றும் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதிலும் அர்ப்பணிப்போடு இருக்கும் ஜனாதிபதி வேட்பாளரை நான் ஆதரிக்கிறேன் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
மில்லியன் டொலர் பரிசு
இதேவேளை, உலக பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்டவற்றின் உரிமையாளருமான எலான் மஸ்க் (Elon Musk) அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டொலர் பரிசு வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.
டிரம்பின் பிரச்சாரத்துக்கு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியதோடு மட்டும் நில்லாமல் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் திடீரென ட்ரம்புக்கு ஆதரவு அதிகரித்து முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்புக்கு வெற்றி வாய்ப்பு
டெசிஷன் டெஸ்க் ஹெச்குயூ-தி ஹில் என்ற நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்புக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், அவருக்கு 52 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மிச்சிகன், விஸ்கான்சின், அரிசோனா, ஜோர்ஜியா மற்றும் வட கரோலினா மாநிலங்களில் ட்ரம்புக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
அதேபோல, ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸுக்கு 42 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |