ஊடகவியலாளர்களுக்கு புதிய ஒழுக்கக்கோவை : வெளியான விசேட வர்த்தமானி

Government Of Sri Lanka Sri Lankan Peoples New Gazette Journalists In Sri Lanka Nalinda Jayatissa
By Sathangani Jun 06, 2026 05:28 AM GMT
Report

இலங்கையின் ஊடகத் துறையில் பணியாற்றும் உயர்தொழிலாளர்களுக்கான தொழில்சார் நியமங்களை அறிமுகப்படுத்துவதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் ஏதுவாக “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்" எனும் புதிய அமைப்பைத் தாபிப்பதற்கான சட்டமூலம் அரசாங்க விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதியன்று இந்த விசேட வர்த்தமானி குறைநிரப்பியாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தின்படி, புதிய நிறுவகமானது சுயாதீனமாக இயங்கும் ஒரு கூட்டுத்தாபனமாக அமையவுள்ளதுடன் பின்வரும் முக்கிய குறிக்கோள்களைக் கொண்டு செயற்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடலுக்கு சிறையா! தாயக கலைஞனை விடுவிக்க கோரி மாபெரும் போராட்டம்

பாடலுக்கு சிறையா! தாயக கலைஞனை விடுவிக்க கோரி மாபெரும் போராட்டம்

 தொழில்சார் ஒழுங்கமைப்பு

அதன்படி, ஊடகத்துறையில் பணியாற்றும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பதிப்பாசிரியர்கள், தொகுப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள், ஊடக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து உயர்தொழிலாளர்களையும் ஒரே தொழில்சார் ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவருதல்.

ஊடகவியலாளர்களுக்கு புதிய ஒழுக்கக்கோவை : வெளியான விசேட வர்த்தமானி | Bill To Chartered Institute Of Media Professionals

தகைமை வாய்ந்த ஊடகவியலாளர்களை உறுப்பினர்களாக நிரலிற் சேர்த்தல் மற்றும் அவர்களின் தராதரங்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரமளித்தல்.

ஊடகக் கல்வி, பயிற்சி நெறிகள் மற்றும் பரீட்சைகளை நடாத்தி, சர்வதேச ஊடகப் போக்குகளுக்கு ஏற்ப ஆராய்ச்சிகளை முன்னெடுத்தல்.

மிக முக்கியமாக, அனைத்து உறுப்பினர்களும் மாணவர்களும் பின்பற்றுவதற்கென விசேட நடத்தைக் கோவையொன்றைத் தயாரித்து, தொழில்சார் ஒழுக்காற்றைப் பேணுதல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

இடைக்காலப் பேரவை

மேலும் இந்த நிர்வகத்தின் நிர்வாகக் கருமங்களை முகாமைத்துவம் செய்வதற்காக 15 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் பேரவையொன்று நியமிக்கப்படவுள்ளது.

இதில் ஊடகத்துறையில் தகைமையும் அனுபவமும் மிக்க 8 பேர் தேர்தல் மூலமும், 7 பேர் நியமனம் மூலமும் உள்வாங்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு புதிய ஒழுக்கக்கோவை : வெளியான விசேட வர்த்தமானி | Bill To Chartered Institute Of Media Professionals

ஆளும் பேரவை முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் வரை, தற்காலிகமாக "இடைக்காலப் பேரவை" ஒன்று அமைச்சரினால் நியமிக்கப்படும்.

இந்த இடைக்காலப் பேரவையில் அமைச்சின் செயலாளருடன், ஊடகத்துறையில் ஆகக்குறைந்தது 20 வருட அனுபவம் வாய்ந்த 6 நிபுணர்கள் இடம்பெறுவர் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015