நட்டமடையும் அரச நிறுவனங்கள்: பில்லியன் கணக்கில் மக்கள் நிதி வீணடிக்கப்படவதாக குற்றச்சாட்டு
பாரிய நட்டத்தில் இயங்கும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் சதொச ஆகிய அரச நிறுவனங்களுக்குத் தொடர்ந்து பொதுமக்கள் வரிப்பணத்தை ஒதுக்குவது, தெரிந்தே அரச வீனடிக்கும் செயல் என குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நிதி அமைச்சின் அறிக்கையை மேற்கோள் காட்டி வெளியாகிய கருத்துக்களில் 2025/2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 3.56 பில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையற்ற தகவல்கள்
ஜூன் 2026 நிலவரப்படி இந்நிறுவனத்தின் மொத்த சொத்துக்கள் 209.9 பில்லியன் ரூபாயாக உள்ள போதிலும், அதன் மொத்தக் கடன் பொறுப்புகள் 561.4 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளன.

கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு முந்தைய செயற்பாட்டு இலாபத்தை மட்டும் காண்பித்து, நிறுவனம் இலாபத்தில் இயங்குவதாக ஆளும் தரப்பினர் முழுமையற்ற தகவல்களை முன்வைப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மேலும் ச.தொ.ச நிறுவனம் குறித்தும் அதிருப்தி எழுந்துள்ளது. சில்லறை விற்பனைக் கடைகளை நடத்தி உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விற்பது அரசாங்கம் செய்ய வேண்டிய அத்தியாவசிய வணிகம் அல்ல என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ச.தொ.ச நிறுவனம் தொடர்ச்சியாக நஷ்டமடைகிறது என்பதை நன்கு அறிந்திருந்தும், நிர்வாகத்தில் எவ்வித மறுசீரமைப்புகளையும் மேற்கொள்ளாமல் கடைகளின் நிறத்தை மட்டும் மாற்றிப் புதிய கிளைகளைத் திறப்பது பொதுமக்கள் பணத்தை வீணடிக்கும் செயல் என விமர்சிக்கப்பட்டுள்ளது.
மறைமுக அரசியல் மற்றும் வணிக உடன்படிக்கை
தொடர்ந்து நட்டமடையும் இந்த நிறுவனங்களை மூடாமல் வைத்திருப்பதற்குப் பின்னால் மறைமுக அரசியல் மற்றும் வணிக உடன்படிக்கைகள் இருக்கின்றதா? இதன் மூலம் சாதாரண மக்களுக்குப் பதிலாக வேறு சில தரப்பினரே இலாபம் ஈட்டுகின்றனரா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

கடந்த காலங்களில் ஒரு இலட்சம் அல்லது இரண்டு இலட்சம் ரூபாய் அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதற்கே வழக்குகள் தொடரப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பில்லியன் கணக்கில் மக்கள் பணம் வீணடிக்கப்படுவதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தற்போது அதிகாரமிக்கதாக விளங்கும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து, உரித தரப்பை பெருப்புகூறவைக்கவேண்டும் என கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |