கண்ணாடி உடைந்து விமானிகளின் முகங்களில் இரத்தம் - நடுவானில் நடந்த அதிர்ச்சி!
Ecuador
World
By Pakirathan
ஈக்வடோரில் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தின் மீது பெரிய பறவை ஒன்று மோதியதில் காக்பிட் கண்ணாடி உடைந்து, விமானிகளின் முகங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
லாஸ் ரியாஸ் மாகாணத்தில் குறித்த சம்பவம் நேர்ந்துள்ளது.
விமானத்தின் கண்ணாடியில் மோதி இறந்த பறவையின் உடல் அந்தரத்தில் தொங்கியபடி விமானம் பயணித்துள்ளது.
விமானத்தின் நிலை
கண்ணாடி உடைந்து காக்பிட்டுக்குள் பலத்த காற்று வீசிய போதும், பறவையின் இரத்தம் தெறித்து இருந்த நிலையிலும் விமானிகள் பதற்றமடையவில்லை எனக் கூறப்படுகிறது.
விமானிகள் குறித்த விமானத்தை அருகில் இருந்த விமான நிலையத்தில் எந்தவித பிரச்சினையும் இன்றி தரையிறக்கியுள்ளனர்.
விமானத்தில் மோதிய பறவை பிணந்தின்னிக் கழுகு வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
