பிரித்தானியாவில் வெடிப்பு சம்பவம் -உயிரிழப்புகள் பதிவு
பிரித்தானியாவில் பர்மிங்ஹாமில் இடம்பெற்ற வெடிவிபத்தில் வீடொன்று இடிந்து சேதமடைந்துள்ளதுடன் மேலும் பல குறிப்பிடத்தக்க வகையில் சேதமடைந்துள்ளதாக மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிங்ஸ்டாண்டிங்கில் உள்ள டல்விச் சாலையில் நடந்த சம்பவத்தை அடுத்து உள்ளூர் நேரப்படி 20:30 க்குப் பிறகு அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காயங்களின் எண்ணிக்கை மற்றும் விபத்தின் தீவிரம் தற்போது தெரியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காட்சிகளின்படி, சிவப்பு செங்கல் மாடி வீட்டில் இருந்து தீப்பிழம்புகள் ஏற்பட்டுள்ளதையும், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதையும் காட்டுகின்றது.
இந்நிலையில், டல்விச் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிக்னறன. வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.