அமெரிக்காவில் கசப்பான தோல்வியை நியாயப்படுத்த ட்ரம்ப் முயற்சி...! இப்ராஹிம் ஸோல்ஃபகாரி கேலி
தெற்கு இஸ்பஹானில் அமெரிக்கா ஒரு கசப்பான தோல்வியை சந்தித்துள்ளது. அதனை நியாயப்படுத்த ட்ரம்ப் முயல்கிறார் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தெhடர்ந்து உரையாற்றுகையில், தெற்கு இஸ்ஃபஹானில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஈரானியப் படைகள் மேற்கொண்ட வீரமிக்க நடவடிக்கைகள், அமெரிக்க இராணுவத்தின் பலவீனத்தையும், அப்படைகளின் அவமானகரமான தோல்வியையும் வெளிப்படுத்துகின்றன.
கசப்பான தோல்வி
இந்த சூழலில், ட்ரம்ப் பொதுமக்களின் கருத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, தனது பலவீனமான இராணுவத்தின் கசப்பான தோல்வியை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்.

இறைவனின் உதவியுடன், எங்கள் தேசத்தின் துணிச்சலான போராளிகள் எந்தவொரு ஆக்கிரமிப்பாளரையும் வெட்டி வீழ்த்தி, அவர்களை முற்றிலுமாக நசுக்குவார்கள் என்று நாங்கள் முன்னரே எச்சரித்திருந்தோம்.
தெற்கு இஸ்ஃபஹானில் ஈரானியப் படைகளின் தீர்க்கமான வெற்றி, இந்தத் துணிச்சலான நடவடிக்கைக்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும் என்று அவர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |