பலுசிஸ்தான் விடுதலை படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா
பாகிஸ்தானில் இயங்கும் பிரிவினைவாத அமைப்பான பலுசிஸ்தான் விடுதலைப்படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பலுசிஸ்தான் விடுதலை படை பாகிஸ்தானுக்கு எதிராக தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தொடர் வன்முறை தாக்குதல்களை அடுத்து, பலுசிஸ்தான் விடுதலை படை மற்றும் அதன் மற்றொரு பெயரான மஜீத் படைப்பிரிவை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலுசிஸ்தான் விடுதலை படை
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்த அறிவிப்பை செய்திக்குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் அவர் கூறியுள்ளதாவது, “ பலுசிஸ்தான் விடுதலை படையின் வன்முறை நடவடிக்கைகள் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
மேலும், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்தும் வருகின்றன. வெளியுறவுத் துறையின் இந்த நடவடிக்கை பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான ஆதரவை குறைப்பதற்கு இதுவே ஒரு சிறந்த வழி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
