வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி முடிவிடத்தில் திடீர் மாற்றம் - பிரகடன அறைகூவலுக்கு தயாராகிறது பெவர் மைதானம்!
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாளான இன்று மட்டக்களப்பு நகரை பேரணி சென்றடைந்துள்ளது.
இந்த பேரணியை வரவேற்பதற்காகவும் பிரகடனத்திற்காகவும், பெவர் மைதானம் தயாராகிறது.
தமிழர்தாயகத்தின் அரசியல் அபிலாசைகள் வலியுறுத்தும் பேரணி இன்று மட்டக்களப்பு காந்தி மைதானத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டாலும் மக்களின் எழுச்சி மற்றும் திரள்நிலை காரணமாக பிரகடன அறைகூவல் நிகழ்வு மட்டக்களப்பு வெபர் மைதானத்துக்கு மாற்றப்பட்டதாக தெரியவருகிறது.
எனினும் சிறிலங்கா காவல்துறையினர் இதற்கு அனுமதிவழங்காததால் எழுச்சியுடன் மைதானத்துக்குள் பிரவேசிக்க அறவழியாளர்களும் முயற்சிப்பதாக பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவித்துள்ளன.
வடக்கில் இருந்த கிழக்கு நோக்கிய பேரணி தற்போது மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தை சென்றடைந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் பிரகடனம் முன்பாக, பேரணியாக சென்றோர் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மணவர்களின் சிற்றுரையும் இடம்பெற்றதையடுத்து, பேரணி மட்டக்களப்பு நகர் நோக்கி நகரத் தொடங்கினர்.
இதன் போது மரபு வழித்தாயகம், சுயநிர்ணயம் என்பன போன்ற பொங்கு தமிழ்பிரகடனம் மூலம் தமிழர் உரிமைகளுக்கான கோசங்களுடன் பேரெழுச்சி பேரணி இன்னும் சற்று நேரத்தில் மைதானத்தை சென்றடையவுள்ளது.











தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
