ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்...! சர்வதேச நாடுகளுக்கு ட்ரம்பின் முக்கிய அறிவிப்பு
சர்வதேச எரிசக்தி விநியோகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait of Hormuz) பாதுகாப்பை உறுதிப்படுத்தச் சர்வதேச நாடுகளின் அதிகப்படியான உதவி தேவைப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், குறிப்பாகச் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுவது சிறப்பாக இருக்கும் என அழைப்பு விடுத்துள்ளார்.
ஆசிய நாடுகள்
இருப்பினும், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளைப் போலத் தங்களது நாடு ஹார்முஸ் ஜலசந்தியை அதிகளவில் பயன்படுத்துவதில்லை என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, அமெரிக்காவிற்கு அந்த நீர்வழியின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடும் வகையில் ட்ரம்ப் கருத்து வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க அந்தப் பாதையை அதிகம் பயன்படுத்தும் நாடுகளே அதன் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற தொனியில் அவர் கருத்து வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்