தமிழர் தாயகத்தின் எழுச்சிப் பேரணி - கிழக்கிலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பு (காணொளி)
வடக்கில் வடகிழக்கு இணைந்த தமிழர் தாயக பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளையும் கண்டித்து இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என்பதனை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளது.
வடகிழக்கு இணைந்ததாக முன்னெடுக்கப்படவுள்ள குறித்த எழுச்சிப் பேரணி ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது வடக்கில் நாளைய தினம் ஆரம்பமாகும் எழுச்சி பேரணியானது கிழக்கில் ஏழாம் திகதி நிறைவடையவுள்ள நிலையில் அதனை கிழக்கு மாகாணத்தில் எழுச்சியான வகையில் வரவேற்பது குறித்து கலந்துரையாடப்படுவதுடன் இந்த போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
