வவுனியாவில் இடம்பெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு
Vavuniya
Tamil National People's Front
By Sumithiran
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் வவுனியாவில் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா மாநகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபி முன்பாக கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சு.தவபாலன் தலைமையில் இந்நிகழ்வு இன்று (23.07) இடம்பெற்றது.
கறுப்பு யூலை படுகொலை பதாதைக்கு தீபம் ஏற்றி மலரஞ்சலி
இதன்போது படுகொலையின் போது மரணித்த உறவுகளுக்காக கறுப்பு யூலை படுகொலை பதாதைக்கு தீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கறுப்பு யூலை படுகொலை தொடர்பில் கருத்துரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வவுனியா மாநகர சபை உறுப்பினர் தர்மரட்ணம், வவுனியா வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் சஞ்சுதன் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்