கண்டியில் வெடிப்பு சம்பவம் - ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
Sri Lanka Police
Kandy
Sri Lanka Police Investigation
Death
By Pakirathan
கண்டி – மெனிக்ஹின்ன பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வயல் நிலமொன்றில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரணம்
குண்டு வெடிப்பினை செய்ய உபயோகிக்கும் உபகரணமொன்றை பயன்படுத்தி, நபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் மெனிக்ஹின்ன – கல்கடுவ பகுதியைச் சேர்ந்த 36 வயதான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்