இலங்கைக்கு இருண்ட காலம்..! நாட்டை விட்டு மக்கள் தப்பியோட்டம் - எதிரணி வெளியிட்ட தகவல்
நாட்டின் குழந்தைகள் சரியான ஊட்டச்சத்தின்றி மயக்கமடைந்து விழும் எமது நாட்டில், இருண்ட எதிர்காலத்தால் அப்பாவி இளம் தலைமுறை நாட்டை விட்டு வெளியேறும் நேரத்தில், ஒட்டுமொத்த மக்களும் வறுமையின் பிடியில் வாடும் நேரத்தில் - உணர்வுள்ள, புரிதலுள்ள எவரும் அமைச்சுப் பதவிகளுக்கு, சலுகை வரப்பிரசாதங்களுக்கு உட்பட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
அமைச்சுப் பதவி

“மனசாட்சியுள்ள எவருக்கும் தற்போதைக்கு அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக் கொள்ள முடியாது. வங்குரோத்தடைந்துள்ள நாட்டில் அமைச்சுப் பதவிகளையும், சலுகைகளையும், வரப்பிரசாதங்களையும் பெறுவது என்பது ஆச்சரியமளிக்கிறது.
நாடு வங்குரோத்து நிலையில் இருக்கும் போது அமைச்சுப் பதவிகளை 15 ஆகவும், பிரதி அமைச்சுப் பதவிகளை 15 ஆகவும் மட்டுப்படுத்தி முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
மொட்டுவின் பலத்துடன் ரணில்

என்றாலும்,மொட்டுவின் பலத்துடன் அதிபர் பதவிக்கு வந்த ரணிலால் அவ்வாறு செயற்பட முடியாது.
தீவிர முதலாளித்துவத்தாலேயோ அல்லது தீவிர சோசலிசத்தாலேயோ ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது. சமூக ஜனநாயகம், சமூகப் பொருளாதார கோட்பாட்டையே ஐக்கிய மக்கள் சக்தி பின்பற்றுகிறது.
இயலுமை, திறமை, நிபுனத்துவ ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையிலான சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதே காலத்தின் தேவை” - என்றார்.