அனுமதிப் பத்திரம் இன்றி கடற்றொழிலில் ஈடுபட்ட இருவர் கைது
Jaffna
Kilinochchi
Fishing
By Laksi
சுண்டிக்குளம்-சாலை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கடற்றொழிலில் ஈடுபட்ட இருவரை படகுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று(2) இடம்பெற்றுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கை
கடற்படை முகாமிற்கு அருகில் நீண்ட நேரமாக சந்தேகத்துக்கிடமான முறையில் தரித்து நின்ற படகை சுண்டிக்குளம் கடற்படையினர் திடீர் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் குறித்த படகு அனுமதிப்பத்திரம் இன்றி கடற்றொழிலில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது..
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் சுண்டிக்குளம் கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணையின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்