இந்தியா - ஆந்திராவில் நடுக்கடலில் தீப்பிடித்த படகு : 11 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!
India
World
By Beulah
இந்தியாவின் - ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே படகொன்று தீயில் கருகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியை சேர்ந்த 11 மீனவர்கள் நேற்றைய தினம்(01) கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
பின்னணி
இந்நிலையில், நடுக்கடலுக்கு சென்ற மீனவர்கள் சமையல் செய்வதற்காக தங்களது சமையல் எரிவாயு கொள்கலன் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது சமையல் எரிவாயு கொள்கலனில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டு திடீரென படகு தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.

இதுகுறித்து மீனவர்கள் கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோர காவல் படையினர், படகில் இருந்த 11 மீனவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். பின்னர் படகு முழுவதும் தீயில் கருகி கடலில் மூழ்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி