யாழ். தையிட்டி விகாரைக்குள்ளும் தமிழர்களின் உடலங்கள் : வெளியாகும் பகீர் தகவல்
சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரைக்குள் தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக தமிழ் தேசிய செயற்பாட்டாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் விசேட நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போது, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செம்மணியில் கடந்த மாதம் நடைபெற்ற ‘அணையா விளக்கு’ போராட்டத்தின் போது, அங்குச் சென்ற அநுர அரசின் அமைச்சர்கள், உண்மையான ஆதரவை காட்டவில்லை, அவர்கள் அரசியல் நோக்கத்திற்காகவே வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘அணையா விளக்கு’ போராட்டம் ஆரம்பிக்குமுன், அதற்கான முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், அந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதற்கு அர்த்தமில்லை எனவும் வேலன் சுவாமிகள் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
