தோட்டக்காணிக்குள் 8 வயது சிறுவன் சடலமாக மீட்பு! யாழிலும் தொடரும் துயரம்
தோட்டக்காணி கிணற்றில் தூண்டில் போட்டு மீன்பிடித்த 8 வயது சிறுவன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பருத்தித்துறை - திக்கம் - நாச்சிமார் கோவிலடியில் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது..
குறித்த சம்பவத்தின் போது அதே இடத்தைச் சேர்ந்த நியந்தன் ரித்திக்குமார் (வயது - 8) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
பெற்றோர் வேலைக்குச் சென்றுள்ளனர். சிறுவன் தோட்டக்காணியில் பட்டம் ஏற்றி விளையாடி விட்டு சகோதரியுடன் இணைந்து தோட்டக்காணியில் உள்ள கிணற்றில் தூண்டில் போட்டு மீன்பிடித்த போது, கிணற்றுக்குள் தவறி வீழுந்துள்ளார்
சம்பவத்தை ஓடிச் சென்று உறவினர்களிடம் சகோதரி தெரிவித்துள்ளார். உறவினர்கள் சென்று கிணற்றில் தேடிய போது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை ஆதார மருத்துவமனை திடீர் மரண விசாரணை அதிகாரி சிவராசா விசாரணை மேற்டகொண்டுள்ளார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.