தமிழர் பகுதியில் மீட்க்கப்பட்ட இளைஞனின் சடலம்! தீவிர விசாரணையில் காவல்துறையினர்!
மட்டக்களப்பில் (Batticaloa) சவுக்கடி கடற்கரைபகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சவுக்கடி கடற்கரைபகுதியின் சவுக்குத் தோட்டத்திலிருந்து இன்று (11) குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்று (11) காலை பிரதேசவாசிகளால் சடலமொன்று காணப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதையடுத்து, அவ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்து குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் கைப்பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது, சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் செங்கலடி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞரின் மரணம் கொலையா ? தற்கொலையா என்பது குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
