மட்டக்களப்பு கடலில் மிதக்கும் ஆணின் சடலம்
Batticaloa
Sri Lanka Fisherman
By Bavan
மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்று வாய் பகுதிக்கு நேராகக் காணப்படும் கரை நிலமட்டம் தெரியாத கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) மிதந்து கொண்டிருப்பதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பாலமீன்மடுவிலிருந்து கடலுக்கு படகில் மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளர்கள் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதனை காணொளி பதிவு செய்துள்ளனர்.
கரை ஒதுங்க கூடும்
குறித்த சடலம் கடுமையாக ஊதி காணப்படுவதுடன் சடலம் மட்டக்களப்பு, கல்லடி, அல்லது ஏறாவூர், காத்தான்குடியை சுற்றியுள்ள கடற்கரை பகுதியில் கரை ஒதுங்க கூடும் என அவர்கள் தெரிவித்தனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணிக்காக இப்போது பேசாவிட்டால் இனி எப்போதும் பேச முடியாது.... 3 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்