மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
Death
Police
Batticaloa
By Kumar
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட திராய்மடு பகுதியிலிருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திராய்மடு,முருகன் ஆலயத்திற்கு அருகில் உள்ள காணியொன்றிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டதுடன் குறித்த நபர் பயணித்ததாக நம்பப்படும் மோட்டார் சைக்கிளும் அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.
குறித்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென தெரிவித்த காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பகுதிக்கு சென்ற மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்ததுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.





