வைத்தியசாலைக்கு சென்ற நபர் வாவியில் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்தின் அருகிலுள்ள வாவியில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று (29) மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது புதிய காத்தான்குடி 6 ம் பிரிவு ஏ.எல்.எஸ். மாவத்தையைச் சேர்ந்த 49 வயதுடைய முகமது கனிபா முகம்மது அஸ்மி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் விசாரணை
குறித்த நபர் சுகயீனம் காரணமாக சம்பவதினமான நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி மட்டு போதனா வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பி வராததையடுத்து உறவினர்கள் தேடிவந்த நிலையில் வாவியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |