மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!
Death
Police
Kalmunai
SriLanka
DeathBody
By Chanakyan
வீடொன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தோம்புதோர் வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தர்மராசா திருச்செல்வம் (வயது- 45) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மனைவி குவைத் நாட்டில் தொழில்புரிந்து வருவதாகவும், தனது மகளுடன் வாழ்ந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி